கோலாலம்பூர் | 3/10/2021 :-

அகில மலேசிய நட்புறவு இயக்கங்களின் ஒருங்கிணைப்புச் சங்கம் எனப்படும்”சஹாபாட் மலேசியா” ஏற்பாடு செய்திருக்கும் அதிர்ஷ்ட குலுக்கு திட்டத்தை ம.இ.கா தேசியத் தலைவர் சார்பாக, மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் தொடக்கி வைத்தார்.

இன்று காலை ம.இ.கா தலைமையகத்தில் இந்தத் திட்டம் என்ற தொடக்கி வைக்கப்பட்டது.

“சஹாபாட் மலேசியா” என்று அறியப்படும் இந்த இயக்கத்தின் குறிக்கோள், திட்டங்கள் யாவும் இந்தியர்களின் சமூக, பொருளாதார ரீதியிலான மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சஹாபாட் மலேசியா உறுப்பினர்களின் சமூக பொறுப்பு, பொது நல மக்களின் சமூக பொறுப்பு, தொழில்முனைவோர் உருவாக்குதல் மற்றும் புத்துயிர் பெற்ற இளைய தலைமுறையினரை புதிய சிந்தனை, புதிய ஆற்றலுடன் உருவாக்குதல் ஆகியவை இந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாகும்.

இந்த இயக்கத்தின் திட்டங்கள், செயல்கள் யாவும் வெற்றி பெற அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.