மலாக்கா | 12/10/2021 :-

மலாக்கா மாநிலத்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு சுலைமான் முகம்மட் அலி தலைமையேற்கிறார். அவருக்கு மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் துணை நிற்பார்கள் என மலாக்கா மாநில அரசாங்கச் செயலாளர் கமெல் முகம்மட் தெரிவித்தார்.

பதவி விலகிய ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தவிர்த்து மற்றவர்கள் தங்களின் பணியை ஆற்றுவர்.

இடைக்கால அரசாங்கத்தின் செயல்பாடுகளை மலாக்கா மாநில அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டு விளக்கவில்லை என்றாலும், காமன்வெல்த் நாடுகளின் மக்களாட்சி முறைப்படி புதிய அரசாங்கம அமைக்கப்படும் வரை ஒரு மாநிலத்தை / நாட்டை ஆட்சி செய்ய அந்த முறை வழி வகுக்கிறது என கமெல் சொன்னார்.

பொது நலன் கருதி, புதிய அரசாங்கத்திற்கு பொருட்செலவு ஏற்படுத்தாத எந்தக் கொள்கையையும் இடைக்கால அரசாங்கம் வகுக்க முடியாது.

மாநில ஆட்சி தொடர்பான கூட்டங்கள், மாநில அரசாங்கத்தின் வழக்கமான செயல்பாடுகள் போன்றவற்றை மட்டுமே இடைக்கால அரசாங்கம் மேற்கொள்ள முடியும் ன் என கமெல் குறிப்பிட்டார்.