கோலாலம்பூர் | 13/10/2021 :-

மலாக்கா மாநிலத் தேர்தலில் பெர்சத்து, பாஸ் ஆகியக் கட்சிகளுடன் ஒத்துழைப்பு கிடையாது என அம்னோவின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

முவாஃபாக்காட் நேஷனல் அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்படாததால் எந்த இடைத் தேர்தல்களிலும் அந்தப் பெயரில் கூட்டணி அமைக்கப்படவில்லை என அவர் சொன்னார்.

தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளுடன் அம்னோ தனித்தே போட்டியிடும். மக்கள் சிறந்தக் கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள் எனத் தாம் நம்புவார்கள் எனக் கூறினார்.

மேலும், அம்னோ பொதுக் கூட்டத்தில் முடிவெடுத்தது போல் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை மீட்டுக் கொண்டதை மதிப்பதாகவுமதவர் தெரிவித்தார்.

“ஒரு முறை துரோகத்தால் பாதிக்கப்பட்டதே போதும்”

இந்த பாதிப்பு மீண்டும் நேரக் கூடாது. அது பலரைச் சென்றடைகிறது என்பதால் சில ஒத்துழ்ழைப்பு குறித்து மறு மதிப்பீடு செய்ய வேண்டியக் கட்டாயம் உள்ளது என அவர் சொன்னார்.