நாடாளுமன்றம் | 13/10/2021 :-

கடந்த 9/10/2021 வரையில் அரசாங்கம் அறிவித்த 150,000 இலவச மடிக்கணினிகளில் 1,169 பள்ளிகளிக்கு 137,987 மடிக்கணினிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டதாக கல்வி அமைச்சர் முகம்மட் ரட்ஸி முகம்மட் ஜிடின்

6,387 மடிக்கணினிகள் Yayasan Hasanah அறவாரியத்திடம் ஒப்படைத்திருபதாகவும், அந்த அறவாரியம் கூடிய விரைவில் அந்த மடிக்கணினிகளை பகிர்ந்தளித்து விடும் எனவும் அவர் சொன்னார்.

https://icf.newscdn.net/publisher-c1a3f893382d2b2f8a9aa22a654d9c97/2021/10/cf17406824d8c54011146f1d6316f8d2.png

எஞ்சிய 5,626 மடிக்கணினிகளை அந்த அறவாரியம் பெற்றவுடன் பகிர்ந்தளித்து விடும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அறிவித்த 150,000 இலவச மடிக்கணினிகள் குறித்து நம்பிக்கைக் கூட்டணியின் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சு கி வினவிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 111, 040 மடிக்கணினிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வருமானம் குறைவான குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு அனைத்து 150,000 மடிக்கணினிகளும் இவ்வாண்டு செப்டெம்பர் மாத வாக்கில் பகிர்ந்தளித்து விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.