மலாக்கா | 13/10/2021 :-

மலாக்கா மாநில தேர்தல் குறித்து விவாதிக்கவும் அதன் திகதியை முடிவு செய்யவ்ய்ம் தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் திங்கட்கிழமை கூடுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த சிறப்பு சந்திப்புக் கூட்டத்தை தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சால்லே தலைமையேற்பார்.

தேர்தல் நாள், வேட்புமனு நாள், இதர தயார்நிலைகள் ஆகியன குறித்து அதில் விவாதிக்கப்படும்.

அந்தச் சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு இடம் பெறும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவ்வாணையம் குறிப்பிட்டது.

 மலாக்கா சட்டமன்றம் களைக்கப்பட்ட பிறகு 60 நாட்களுக்குள் , அதாவது 3/12/2021 ஆம் நாளுக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அம்மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், மலாக்கா தேர்தல் ஒத்திவைக்கப்படும்.

மலாக்காவில் தேர்தல் நடத்தப்படுமா அல்லது ஊரடங்கு அறிவிக்கப்படுமா என அரசாங்கத்தால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.