புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > எஸ்ஆர்சி விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

எஸ்ஆர்சி விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை!

கோலாலம்பூர், செப். 18-
எஸ்ஆர்சி இண்டர்நேஷ்னல் பெர்ஹாட் தொடர்பான விசாரணை அறிக்கையை தாம் இன்னும் பெறவில்லை என சட்டத் துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் வெ. 42 மில்லியன் சேர்ப்பிக்கப்பட்டது குறித்த விசாரணையே எஸ்ஆர்சி விசாரணையாகும். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இந்த விசாரணையை மே மாதத்திற்குள் முடித்துக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பார்ப்பதாக அவர் இதற்குமுன் கூறியிருந்தார்.

நான் இப்போதுதான் மெக்காவிலிருந்து வந்தேன். அலுவலகத்துக்கு வந்து ஒரு நாள்தான் ஆயிற்று, என்ன நடந்துள்ளது என்பது எனக்குத் தெரியாது. உண்மையில், அது பற்றி நான் எதுவும் தற்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அபாண்டி குறிப்பிட்டார்.
மேலும், மே மாதக் கெடு குறித்து வினவியதற்கு, எம்ஏசிசியை நாம் விரட்ட முடியாது. அது பல விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன