கோலாலம்பூர் | 19/10/2021 :-

மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக பங்காலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிஸ்ஹாம் ஹசான் பக்தியைத் தேர்ந்தெடுத்தால் அவரை ஜசெக ஏற்காது எனத் தெரிவித்தது.

மேலும், தேசியக் கூட்டணி – தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கைக் கூட்டணியின் பெயரில் போட்டியிடுவது குறித்து லிம் குவான் எங் கருத்துரைக்கவில்லை.

ஆனால், அந்த சட்டமன்ற உறுப்பினர்களை மலாக்கா மாநிலத் தேர்தலில் வேட்பாளராக ஜசெக ஏற்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்தப் பொதுத் தேர்தலின் போது, நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் நோர்ஹிஸாம் ஜசெகவின் வேட்பாளராகப் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் ஆட்சிகுழு உறுப்பினராகவும் நியமிகப்பட்டார்.

ஆனால், நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேறி தேசியக் கூட்டணி – தேசிய முன்னணி ஆதரவாளாராகினார். அதனால், புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

அண்மையில், அவருடன் முன்னாள் மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹாருன் உட்பட இதர மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மலாக்காவின் கடந்த முதலமைச்சர் சுலைமான் முகம்மட் அலி மீதான ஆதரவை மீட்டுக் கொண்டதால் மலாக்கா மாநில ஆட்சிக் கவிழ்ந்தது.