பலூன் படத்தில் ஜெய், அஞ்சலி ஆகியோருடன் நடித்துவரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கொடைக்கானலில் காரில் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது நிஜப்பேயை தனது கைப்பேசியில் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் பதிவு செய்த அந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.

ஏற்கனவே, நகைச்சுவை நடிகர் சூரியும் இதேப்போன்று ஒரு வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அது எப்படி காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது பேய் வருவது முன்கூட்டியே சூரிக்கு தெரியும் என நெட்டிசன்கள் அவரை கேள்விகள் கேட்டு வறுத்தெடுத்தனர். இப்போது யோகிபாபுவும் அதே மாதிரியான வீடியோவை வெளியிட்டுள்ளார். எது எப்படியோ பேய்களுக்கும் ஹீரோக்களை விட காமெடியன்களைத்தான் பிடித்திருக்கிறது போல.