கோலாலம்பூர் | 23/10/2021 :–
மூன்று ஆண்டுகள் ம.இ.கா.வின் மகளிர் பிரிவின் தலைவியாக தாம் செயல்படவில்லை எனக் கூறுவது அடிப்படையற்றது என உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியின் தலைமைத்துவம் என்பது 3 ஆண்டு காலம். அந்தக் காலக்கட்டத்தில் மகளிர் பிரிவை சரி வர வழிநடத்தவில்லை எனவும் கோவிட்-19 காலத்தில் ஆக்ககரமானப் பணியை மேற்கொள்ள வில்லை எனும் கருத்தை உஷா நந்தினியை எதிர்த்துப் போட்டியிடும் அணியில் இருக்கிற துணைத் தலைவியான விக்னேஸ்வரவி பாபு ஜி கூறியதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு சொன்னார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வினேஸ்வரை தம்முடன் தான் கட்சியின் பயணித்ததாகவும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே இருந்ததாகவும் கூறிய உஷா நந்தினி, அவ்வாறு விக்னேஸ்வரி தெரிவித்தது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமது தலைமைத்துவத்தின் மகளிர் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் தமது திட்டங்கள் குறித்தும் முழு விளக்கம் கொண்ட புத்தகத்தை வெளியிட்டிருப்பதாக உஷா நந்தினி சொன்னார்.
குறிப்பாக, கோவிட்-19 காலக்கட்டத்தில் எந்தவிதத் தயக்கமும் இன்றி வெளியில் வந்து WANITA MIC SISTERS OUTREACH PROJECT எனும் திட்டத்தின் வாயிலாக கோவிட்-19 தொற்று காரணமாகப் பலவாறு பாதிக்கப்பட்ட கிளை நிலையில் உள்ள உறுப்பினர்கள் வரையில் உதவியிருப்பதாக உஷா நந்தினி குறிப்பிட்டார்.

அதே சமயம், நடமாட்டக் கட்டுப்பாட்டால் நிறைய நிகழ்ச்சிகளும் திட்டங்களும் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்டன. Cabaran Politik Semasa, இலவச மலாய் மொழி பாட வகுப்புகள் (பள்ளி மாணவர்களுக்கு) தொழில்முனைவர் நிகழ்ச்சிகள், பயிற்சிகள், Wanita MIC Essential Basket Program போன்றவைகள் தமது தலைமைத் துவத்தின்கீழ் நடத்தப்பட்டதாக உஷா நந்தினி வெளியிட்டப் புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார்.
ம.இ.கா. கட்சித் தேர்தல் : மகளிர் அணியில் உஷா – மோகனா நேரடிப் போட்டி !

