மலாக்கா | 6/11/2021 :-
மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், பல புது முகங்கள் களம் காண இருக்கிறார்கள்.
ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 13 பேர்களில் நால்வர் மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், 28 வேட்பாளர்களில் ஐவர் பெண்கள் ஆவர்.
அவர்களில் 20 பேர் அம்னோவைச் சேர்ந்தவர்கள். கடந்த 14வது பொதுத் தேர்தலில் 18 பேர் மட்டுமே அம்னோவிலிருந்து போட்டியிட்டனர்.
மசீசா- வில் இருந்து 7 பேர் போட்டியிடும் வேளையில் கடந்த 14வது பொதுத் தேர்தலில் 6 பேர் மட்டுமே போட்டியிட்டனர்.
இதனிடையே, கடந்தப் பொதுத் தேர்தலைப் போலவே இம்முறையும் ம.இ.கா.வைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பெங்காலான் பத்து சட்டமன்றத் தொகுதி கெராக்கான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அது அம்னோவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
மசீச-வின் டூயோங் சட்டமன்றத் தொகுதியில் தற்போது அம்னோ வேட்பாளர் போட்டியிட உள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்தப் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த தேசிய முன்னணியின் லிம் பான் ஹோங் (கெலெபாங்), கோ சின் ஹான் (பெம்பான்)., அப்துல் இரஸாக் அப்துல் இரகுமான் (தெலுக் மாஸ்) ஆகியோரை மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் லிம் மட்டும் கடந்த 2013 ஆம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். ஆனால், 2018 ஆம் ஆண்டு தோல்வி அடைந்தார்.
இதனிடையே, கடந்த சனவரி மாதம் இணைந்த அம்னோவி புதிய உறுப்பினரான முகம்மட் ஜைலானி காமிஸ்-ஐ ரெம்பியா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக தேசிய முன்னணி அறிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த 14வது பொதுத் தேர்தலில், ஜைலானி பிகேஆர் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். பின்னர், கடந்த மார்ச் மாதம் பிகேஆர் கட்சியின் இருந்து விலகி அவர் அம்னோவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் பட்டியல் :
- கோலா லிங்கி – ரோஸ்லி அப்துல்லா * – அம்னோ
- லெண்டு – சுலைமான் முகம்மட் அலி * – அம்னோ
- ரெம்பியா – முகம்ம்மட் ஜைலானி காமிஸ் * – அம்னோ
- ஆயர் மோலேக் – ரஹ்மாட் மாரிமான் * – அம்னோ
- செர்க்காம் – ஸைடி அட்டான் * – அம்னோ
- தஞ்சோங் பிடாரா – அப்துல் ரவுஃப் யூசோ – அம்னோ
- ஆயர் லீமாவ் – ஹமீட் மைதீன் குஞ்சு பஷீர் – அம்னோ
- டாபோ நானிங் – ஸுல்கிஃப்லி ஹஜி முகம்மட் ஸின் – அம்னோ
- டுரியான் துங்கால் – ஸஹாரி அப்துல் காலில் – அம்னோ
- அசாஹான் – ஃபைருல் நிஸாம் ரோஸ்லான் – அம்னோ
- சுங்கை ஊடாங் – ஃபஸாருல் முகம்மட் இசா – அம்னோ
- பந்தாய் குண்டோர் – முகம்மட் அலி ஹஜி முகம்மட் – அம்னோ
- பாயா ரும்புட் – ரயிஸ் யாசின் – அம்னோ
- பெங்காலான் பத்து – கல்சோம் நோர்டின் – அம்னோ
- புக்கிட் கத்தில் – ஹஸ்னோர் ஹுசேன் – அம்னோ
- டூயோங் – முகம்மட் நோர் ஹெல்மி அப்தும் ஹலென் – அம்னோ
- ரிம் – கைடிரியா அபு ஸாஹார் – அம்னோ
- மெர்லிமாவ் – டாக்டர் முகம்மட் அக்மால் சாலே – அம்னோ
- சுங்கை ரம்பாய் – சித்தி ஃபைஸா அப்துல் அஸிஸ் – அம்னோ
- தெலுக் மாஸ் – அப்தில் ரஸாக் ஹஜி அப்துல் ரஹ்மான் – அம்னோ
- மாச்சாப் ஜெயா – ங்வீ ஹீ செம் – மசீச
- கெலேபாங் – லிம் பான் ஹோங் – மசீச
- ஆயர் கெரோ – யோங் ஃபுன் ஜுவான் – ம.சீ.ச.
- கெசிடாங் – லியோங் ஹுய் யிங் – மசீச
- கோத்தா லக்சாமானா – பெஞ்சமின் லோவ் சின் ஹோங் – மசீச
- பண்டார் ஹிலிர் – லீ கா சியன் – மசீச
- பெம்பான் – கோ சின் ஹான் – மசீச
- காடேக் – நடராஜா செல்லப்பா – ம.இ.கா.
* முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

