அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > மெக்ஸிக்கோ நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலி!
உலகம்முதன்மைச் செய்திகள்

மெக்ஸிக்கோ நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலி!

மெக்ஸிகோவின் பியூப்லா நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

தற்போது பாதிக்கப்பட்ட பொதுமக்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தின் அளவு 7.1 ரிக்டர் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள ஏராளமான வீடுகள், தேவாலயங்கள், கட்டிடங்கள் இடிந்து தரமட்டமாகும் வீடியோக்களை பியூப்லா கவர்னர் டோனி கலில் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார்.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலுவலகங்கள், வீடுகளை விட்டு வெளியேறி பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து ஆறுதல் படுத்திக் கொண்டனர். இதனால் மெக்ஸிகோ நகரில் பதட்டம் நிலவுகிறது. மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைகின்றனர், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நிலநடுக்கம் ஏற்படப் போகும் முன் அங்குள்ள மார்கெட்டில் எரிவாயு கசிவை உணர்ந்த மார்கெட் தொழிலாளி ஒருவர் அங்கு இருக்கும் யாரையும் புகைபிடிக்க வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறார். பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுவதை டிவிட்டர் பக்கதில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோல் 1985 -ல் 8.1 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ரோமாவின் அண்டைப் பகுதி கடுமையாக சேதப்பட்டு, ஆயிரத்துக்கும் மேலானோர் பலியாகினர். இரண்டாவது முறையாக மெக்ஸிகோவை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கபடவில்லை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன