பெட்டாலிங் ஜெயா | 6/12/2021 :-

சிலாங்கூர் மாநிலத்தை கோவிட் 19 பெருந் தொற்றிலிருந்து காப்பாற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தியது. மிக மோசமாகப் பாதிப்படைந்த சிலாங்கூர் மாநிலம் மீட்சி பெற நடுவண் அரசை மட்டும் நம்பி இல்லாமல் தனது சொந்த முயற்சியையும் எடுத்து இப்போது எர்றியும் கண்டுள்ளதை மறுக்க முடியாது என சிலாங்கூர் முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெர்வித்தார்.

மக்கள் நீதிக் கட்சியின் 2021 ஆம் ஆண்டு  தீபாவளி – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், இதுவரையில் 170,000 பேருக்கு மேல் கோவிட் 19  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிக காட்டி  நோய்தொற்றை எதிர்கொள்வதில் சிலாங்கூர் மாநிலம் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என அவர் சொன்னார்.

மக்கள் பணத்தை களவாடியத் தரப்பினரிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பல முறைகேடுகளிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதில் இருந்து நாம் தவறினால், தேசிய முன்னணி தொடர்ந்து வெற்றியடைவதோடு மக்கள் ஊழல் வாதிகளின் கைகளில் மீண்டும் சிக்குவார்கள் என்றார் அவர்.

தேர்தல் தோல்விகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல, 2004இல் நாம் படு தோல்வி அடைந்த அனுபவமும் உண்டு. டெப்பாசிட்டை இழ்ழந்திருக்கிறோம். தோல்விகளைக் கண்டு துவண்டு விட வேண்டாம், அதே சமயம், அது குறித்து யார் மீதும் பழி சுமத்தவும் வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

சபா மாநில தேர்தலில் தோல்வி கண்டோம், ஆனால் நாம் தொடர்ந்து போராடி வந்ததால், 2008ம்  ஆண்டு  பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மட்டுமல்லாது, மற்ற மாநில ஆட்சிகளும் நமது கைக்கு வந்தது.

சிலாங்கூர் நமது கோட்டை. அதனை நாம் தற்காக்க வேண்டும். என வலியுறுத்தினார். சிலாங்கூரை பாதுகாத்துக் கொள்வதில் அனைவரும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்  என கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டின் நன்மைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக, மக்கள் நீதிக் கட்சி அதன் தொடர் போராட்டத்தில் இருந்து பின்வாங்க முடியாது,  பின்வாங்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா பேசுகயில், சிறாப்பாகச் செயல்பட்டுவரும் சிலாங்கூர் மாநில தேர்தல் இயந்திரத்தை பாராட்டினார். மாநில அரசாங்கம் பாகுபாடின்றி நியாடமாகச் செயல் படுவதற்கு தென்னமரத் தோட்ட  இந்திய விவசாயிகளின் நிலம், இந்திய தொழிற்துறையினர் மேம்பாட்டுக்கு வழங்கியுள்ள ஐ- சீட் ஆகிய உதவிகளையும்யாவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில இந்திய சமுதாயத்தின் வாக்குகளை மக்கள் நீதிக் கட்சிக்கு பெற்றுத்தருவது நாட்டில் மற்ற மாநிலங்களிலும் இந்திய சமுதாய உயர்வுக்கு வழிவகுக்கும் என்றார். எனவே, அதனை இந்திய தலைவர்கள்  உறுதி செய்ய  கேட்டுக் கொண்டார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ், கோலசிலாங்கூர் தென்னமரத் தோட்ட தொழிலாளர்களின் 40 ஆண்டு கால விவசாய நில போராட்டத்தினை கடந்த வாரத்தில் மாநில மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி வெற்றிகரமாக தீர்த்து வைத்ததை வெகுவாகப் பாராட்டினார்.