அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > விமான நிலையங்களில் குடிநுழைவுத் துறையின் புதிய கருவி !
முதன்மைச் செய்திகள்

விமான நிலையங்களில் குடிநுழைவுத் துறையின் புதிய கருவி !

கோலாலம்பூர், செப்.20 – 

வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் தங்களின் பயண நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக மலேசிய குடிநுழைவுத் துறை ஒரு புதிய கருவியை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த விருக்கிறது.

இதன்வழி வெளிநாடுகளுக்கு செல்லும் மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ் ஏதேனும் முடக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும் என குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.

இந்த புதிய கருவியின் வழி பயணிகள், குடிநுழைவுத்துறை முகப்புகளுக்கு செல்வதற்கு முன்பாகவே தங்களின் பயண நிலையை அறிந்து கொள்ள முடியும் என மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ முஸ்தாபா அலி தெரிவித்துள்ளார். இதனால் பயணிகள் குடிநுழைவுத்துறை முகப்புகள் வரை சென்று சிரமப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் மலேசியர்கள் தங்களின் பயண நிலையை குடிநுழைவுத் துறையின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில்  http://sspi2.imi.gov.my அறிந்து கொள்ள முடியும்.

மலேசிய குடிநுழைவுத் துறை முகப்புகள் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க இந்த  கருவியை அறிமுகப்படுத்த தமது தரப்பு முடிவு செய்துள்ளதாக முஸ்தாபார் தெரிவித்தார். ஒருவேளை உள்நாட்டு வருமான வாரியத்துட்ன் பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பயணிகள் அந்த பிரச்சினையை முன் கூட்டியே தீர்த்து கொள்ள முடியும் என்றும் முஸ்தாபா கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன