வைர நகைகள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மனு!

0
7

கோலாலம்பூர், செப். 20- 
1எம்.டி.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான வைர நகைகளைத் திரும்ப ஒப்படைக்குமாறு பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், 1எம்டிபி நிறுவனம், தொழிலதிபர் ஜோ லோவிற்கு எதிராக பத்து காவான் அம்னோ டிவிஷனின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹசான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு டத்தோஸ்ரீ ரோஸ்மா மன்சோரும், 1எம்டிபி நிறுவனமும் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளன.

1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான 2 கோடியே 73 லட்ச அமெரிக்கா டாலர் மதிப்புள்ள அந்த வைர நகைகளை அவ்விருவரும் திருப்பி ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்க வேண்டும் என்று கைருடின் வழக்குத் தொடுத்திருந்தார்.

இவ்வழக்கை தொடுப்பதற்கு கைருடினுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதால் இவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமது கட்சிக்காரர் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் கடந்த 7.9.2017ஆம் தேதி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதாக அவரின் வழக்கறிஞர் டத்தோ முகமட் பாரிஸாம் ஹருன் கூறினார்.

இவ்வழக்கில் கைருடின் குறிப்பிட்ட விவகாரத்தை தமது மனுவில் குறிப்பிடவில்லை. காரணம் இவ்வழக்கை 1எம்டிபி நிறுவனம்தான் தொடுக்க வேண்டும். மாறாக, கைருடின் அல்ல என இன்று உயர்நீதிமன்ற துணைத் தலைமை பதிவதிகாரி கே. பவானி தலைமையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் அவர் குறிப்பிட்டார்.

இவ்விசாரணையின்போது 1எம்டிபி சார்பில் வழக்கறிஞர் காயின்ஸ் டானும், ஜோ லோவ் சார்பில் வழக்கறிஞர் ரிஷ்வாண்ட் சிங்கும், கைருடின் சார்பில் வழக்கறிஞர் சைட் இஸ்கண்டார் சைட் ஜபாரும் ஆஜராகினர்.