புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ‘ஹெப்படெட்டிஸ் சி’ நோயினால் 5 லட்சம் பேர் பாதிப்பு
முதன்மைச் செய்திகள்

‘ஹெப்படெட்டிஸ் சி’ நோயினால் 5 லட்சம் பேர் பாதிப்பு

கோலாலம்பூர், செப் 20-

நாட்டில் கல்லீரலைப் பாதிக்கும் ஹெப்படெட்டிஸ் சி (Hepatitis C) எனப்படும் கிருமி அதிகமாக மலேசியர்களைப் பாதித்து வருகின்றது. இதுவரையில் ஏறக்குறைய 5 இலட்சம் பேர் இக்கிருமியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஹெப்படெட்டிஸ் சி வகை கிருமிக்கு எளிதாகப் பெறக்கூடிய மருந்துகள் கிடையாது. முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இருப்பினும் அதன் விலை மிகவும் உயர்வானதாகவே இருந்தது. இக்கிருமியினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க ஏறக்குறைய வெ.50,000 தேவைப்பட்டது என இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இச்செலவு முறையை ஈடுகட்டும் பொருட்டு அரசாங்கம் இருக்கக்கூடிய உரிமைகளைப் பயன்படுத்தி காப்புரிமை (paten) முறையின்றி, பொதுவான (generic) முறையில் மருந்தினைப் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது என அவர் விளக்கமளித்தார்.

இதன்மூலமாக ஹெப்படெட்டிஸ் சி வகை கிருமியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசாங்க மருத்துவமனையிலேயே குறைந்த விலையில் இம்மருந்தினை வழங்கக்கூடிய வாய்ப்புகளும் அதன்வழி நன்மையும் அடையக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. முதல் கட்டமாக 12 அரசாங்க மருத்துவமனைகளில் இம்மருந்துகளின் வழி சிகிச்சைகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன