நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவைகளை மோப்பம் பிடித்து இவை நம்மைத் தேடி வருகின்றன.
மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்.
1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.
2) இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.
3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.
4) பெஸ்ட் கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.
5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..
6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைக்கவும்..
வேறு மற்றும் பாதுகாப்பான முறை
கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.
வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால், அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. எப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மூட்டைப்பூச்சியானது படுக்கும் பெட், மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டிருக்கும். அப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்றுவிட்டால், அதன் இரத்த நாற்றத்திலேயே பல்வேறு மூட்டைப்பூச்சிகள் வர ஆரம்பிக்கும். எனவே மூட்டைப்பூச்சிகள் இருந்தால், அதனை நசுக்காமல், ஒருசில பொருட்களைக் கொண்டு
கொன்றுவிட்டால், அவை அழிந்துவிடுவதோடு, அவற்றை வீட்டில் இருந்து முற்றிலும் வெளியேற்றிவிடலாம்.
வினிகர்
மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் வினிகரை தெளித்தால், அதில் உள்ள அமிலத்தன்மையாலும், அதன் வாசனையிலும் மூட்டைப்பூச்சியானது அழிந்துவிடும்
உப்பு
உப்பு மற்றொரு சிறப்பான பூச்சிக்கொல்லி பொருள். அதற்கு மூட்டைப்பூச்சியின் மேல் கல் உப்பை தூவினால், மூட்டைப்பூச்சியானது இறந்துவிடும்.
வெங்காயச் சாறு
நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே வெங்காயச் சாற்றினை மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் தெளித்துவிட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.
டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ ஆயிலை மூட்டைப்பூச்சி வாழும் இடத்தில் தெளித்தால், அதன் அடர்ந்த வாசனையினால் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடுவதோடு, இனிமேல் மூட்டைப்பூச்சி வருவதையும் தடுக்கலாம்.
லாவெண்டர் எண்ணெய் லாவெண்டர் எண்ணெயும் மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே இதனையும் பயன்படுத்திப் பாருங்கள்.