சென்னை | 29/12/2021 :-
இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் டி. இமான் – மோனிகா ரிச்சர்ட் இருவரும் விவாகரத்து செய்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.
“என்னுடைய நல விரும்பிகளுக்கும் இசை ரசிகர்களுக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.
நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட்டும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.
நாங்கள் இருவரும் இனி கணவன் மனைவி அல்ல. இசை ஆர்வலர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் வகையில் ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
என டி. இமான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த அறிவிப்பு இரசிகர்கள், திரை பிரபலங்கள் ஆகியோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– நக்கீரன் செய்திப்பிரிவு (தமிழகம்)