பிலிப்பைன்ஸ் | 31/12/2021 :-

உலக சுற்றுலா அழகியாக இலங்கையை சேர்ந்த நலிஷா பானு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் வெற்றிப்பெற்று கிரீடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்த போட்டி நிகழ்வு பிலிப்பைன்ஸில் நடைபெற்றது.

உலக சுற்றுலா அழகி போட்டியில் இதற்கு முன்னர் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருந்த நிலையில், உலக சுற்றுலா அழகி கிரீடத்தை பெற்றுக்கொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.