புத்ராஜெயா | 9/1/2022 –
இவ்வாண்டு சனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளி சிற்றுண்டிச் சாலைகளுக்கு வாடகை விலக்கு வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.
அதே காலக்கட்டத்திற்கு கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருக்கின்ற புத்தகக் கடைகள், கூட்டுறவுக் கழகக் கடைகள், சலவைக் கடைகள், குளிர்பான இயந்திரம் ஆகியவற்றுக்கும் வாடகை விலக்கு வழங்கப்படுகிறது எனவும் அவர் சொன்னார்.
முன்னதாக, இரு மாதங்கள் (சனவரி – பிப்பரவரி 2022) வரையில் வாடகை செலுத்த விலக்குக் கொடுக்கப்பட்டிருந்த நில்லையில், அக்காலக் கட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என தமது தரப்புக்குப் பல கோரிக்கைகள் கிடைத்ததால், இந்த முடிவு எடுக்கபப்ட்டது என அவர் தெரிவித்தார்.

