கோத்தா திங்கி | 18/1/2022 :-

கோத்தா திங்கியைச் சேர்ந்த பெர்சாத்து கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் இராஸ்மான் இத்னயின் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துல்ளார்.

இதனால், அக்கட்சி மட்டும் இன்று அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், இப்புகாரில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் தமக்கு எதிரான அரசியல் சதி என்றும் இராஸ்மான் இத்னயின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் தமக்கு எதிராக காவல்துறையில் கோத்தா திங்கி தொகுதியின் ஶ்ரீ கண்டி பெர்சத்து செயலவை உறுப்பினர் புகார் அளித்திருக்கும் தகவல் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக இராஸ்மான் இத்னயின் சொன்னார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நிகராளியான தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க நடைபெறும் முயற்சி. எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குத் தாம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

மேலும், சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.