சமூக வலைத் தளங்கள் அதிரும் ‘‘மெர்சல்” டீசர்

சென்னை, செப் 21

தளபதி விஜய் நடிப்பில் அதிரடி இளம் இயக்குநர் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘மெர்சல். தேனாண்டாள் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் விஜய் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்டது.

இது வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே சமூக தளங்களில் வைரலாகப் பரவி புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மெர்சல் இசை வெளியீட்டு விழாவை தேனாண்டாள் பிக்சர்ஸ் பிரமாண்டமாக நடத்தியது.

இசைப் புயல் ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் விவேக் எழுதிய பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இன்று மலேசிய நேரப்படி இரவு 8.30க்கு மெர்சல் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

வெளியிட்ட சில விநாடிகளிலே சமூக வலைத்தளங்களில் அது வைரலாகப் பரவியது. 1 நிமிடத்தில் 50000க்கும் மேற்பட்டவர்கள் யூடியூப் தளத்தில் அதனை லைக் செய்தார்கள். தற்போது உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அந்த டீசரை சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

1 நிமிடம் 41 விநாடிகள் ஓடக்கூடிய அந்த டீசர் முழுக்க அப்பா விஜய் அனைவரையும் கவர்கிறார். குறிப்பாக அவர் பேசும் வசனம் அனைவரையும் சுண்டி இழுக்கின்றது.