கர்னாடகா | 4/2/2022 :-

இந்தியாவின் பெண்கள் காற்பந்து லீக்கின் அணியான மிசாக்கா யுனைட்டென் எஃப் சியில் இடம்பெற்றிருக்கும் மலேசிய விளையாட்டாளரான நுருல் அஸூரின் மஸ்லான் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா எனும் கேள்விக்குறி இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றது,

அவ்வணியின் கோல் காவலரான நுருல் அஸூரின், தமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக அவருக்கு கர்னாடகா பெண்கள் காற்பந்து லீகின் 2021/2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கோல் காவவர் விருது வழங்கப்பட்டிருந்தது.

அந்த அணியுடனான ஒப்பந்தம் குறித்த முடிவு இன்னும் விவாத நிலையிலேயே இருப்பதாக நுருல் அஸூரின் சொன்னார்.

இந்தியப் பெண்கள் லீக் (IWL)  போட்டியில் மிசாக்கா யூனைட்டென் அணி இடம்பெறுமா என்பதை அகில இந்திய கார்பந்து சம்மேளனம் (AIFF) இன்னும் அறிவிக்காத நிலையில் அந்த முடிவையும் தாம் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அகில இந்திய கார்பந்து சம்மேளனம் (IWL) க்கு மிசாகா யுனைட்டெட் தகுதி பெற்றால், தாம் மீண்டும் அவ்வணிக்கு அழைக்கப்படும் வாய்ப்பு மிகவும் பிரகாடமாக இருப்பதாகவும் நூருல் தெரிவித்தார்.

வெளிநாட்டு அணியில் மலேசிய விளையாட்டாளர் இடம்பெறுவது மட்டும் இன்றி சில முக்க்ய விருதுகள் பெறுகின்ற நிலையில், மலேசிய விளையாட்டாளர்கள் தரமானவர்கள் எனவும் வெளிநாட்டு அணிகள் நம் விளையாட்டாளர்கள் மீது ஒரு நல்ல எதிர்ப்பார்ப்பை தாராளமாக வைக்கலாம் எனவும் சொன்னார்.

மலேசிய விளையாட்டாளர்களுக்குத் தமது சாதனை ஒரு அளவுகோலாகவும் அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். .