7-ம் தேதி வரை பரப்புரை தொடரும் என அறிவிப்பு
சென்னை | 6/2/2022 :-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மு.க.ஸ்டாலின் இன்று முதல் காணொலி மூலம் பரப்புரை மேற்கொள்கிறார். தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல், காணொலி மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. – கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில், காணொலியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போட்டியிடும் தி.மு.க. – கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரைமேற்கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளை சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்தும், 8-ந்தேதி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்தும் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
பின்னர், 9-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும், 10-ந்தேதி ஈரோடு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும், 11-ந் தேதி கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் காணொலி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதைத்தொடர்ந்து 12-ந்தேதி திருப்பூர் மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 13-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 14-ந்தேதி மதுரை மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 15-ந்தேதி தஞ்சை மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 17-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் மு.க.ஸ்டாலின் காணொலி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
~ நன்றி : மாலை முரசு