கோலாலம்பூர் | 14/2/2022 :-

கோவிட்-19 SOP விதிமீறியக் குற்றத்திற்காக பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு, விதிக்கப்பட்ட அபராதம், ஒரு குற்றம் அல்ல என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

அதனால்  ஹிஷாமுடின் பதவி விலகுவதற்கான அவசியம் இல்லை என்றார் அவர்.

நேற்று ஜோகூர் ம.இ.கா. பணிப்படை அறிமுக விழாவில் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறை (SOP)யை மீறியதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன்  பதவி விலக வேண்டும் என சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ வலியுறுத்தினார்

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால் அதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அவர் பதவி விலகவேண்டும் என்பதில்லை

தண்டம் விதிக்கப்பட்ட அனைவரும் பதவி விலக வேண்டும் என்றால் யாருமே வேலையில் இருக்க முடியாது.

SOP முக்கியம் தான். ஆனால், அதனை மீறுவது குற்றச் செயல் அல்ல.

நிகழ்வில் கலந்துகொண்ட ஹிஷாமுடின், ஜொகூர் தற்காலிக முதலமைச்சர் ஹஸ்னி முகமது, மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன் சன்னாசி, ஆகியோருக்கு அபராதம் விதிக்கும்படி சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் உத்தரவிட்டுள்ளார்.

அந்நிகழ்வில் பாதுகாப்பு இடைவெளியின்றி, 3 தலைவர்களும் கூட்டத்துக்கு இடையே நடந்துசெல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.

அதையடுத்து, அவர்கள் பதவி விலகவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர்.