Home மலேசியா கல்வி முதுகலை பட்டம் பெற்றார் சிலிம் ரிவரைச் சேர்ந்த நவனீத் பிரபாகரன் !

முதுகலை பட்டம் பெற்றார் சிலிம் ரிவரைச் சேர்ந்த நவனீத் பிரபாகரன் !

365

கோலாலம்பூர் | 22/02/2022 :-

மலேசியத் திறந்த பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் சிலிம் ரிவரைச் சேர்ந்த நவனீத் பிரபாகரன். குறிப்பாக, பொருளாதாரம், தொழில்முனைவர் பிரிவில் அவர் தமது பட்டயக் கல்வி நிறைவு செய்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் உலகத்தில் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டாலும், தமது கல்விப் பயணத்தை எந்தவிதத் தடையும் இன்றி நேர்த்தியாக நிறைவு செய்துள்ளார் நவனீத்.

நடப்புச் சவால்களோடு பெருந்தொற்றுக் காலச் சவால்களையும் சமாளித்து பணியில் இருக்கின்ற போதே கல்வியையும் தொடர்ந்த இவர், இரண்டையும் சரி சமமாக நிர்வகித்து வெற்றிகரமாகத் தற்போது முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

கற்பது ஒரு தொடர் நடவடிக்கையாகும். கற்பதை நிறுத்தி விட்டால், நாம் முன்னோக்கி செல்ல முடியாது, முன்னேற முடியாது. நற்போதையக் கால மாற்றத்திக்நாம் கல்வியைக் கொண்டு தான் நாம் பயணிக்க முடியும்.

அதே சமயம், மலேசிய இந்தியர்கள் எனும் அடிப்படையில் நாம் கல்வியே நமது முதன்மை ஆயுதம் எனவும் அவர் சொன்னார்.

சட்டம் – வணிகம் ஆகிய இரு துறைகளில் இரட்டை இளங்கலைப் பட்டத்தை முடித்த நவனீத், அதிகமானவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் அவரின் ஆர்வத்தினால் தமது துறை அல்லாத இத்துறையிலும் கால் பதிக்கச் செய்ததோடு முதுகலை பட்டம் வரையில் கொண்டு வந்துள்ளது என்றார். சவால்களைக் கடந்து சாதிக்க முடிந்ததற்கும் அதுவே காரணம் என்றார் நவனீத்.

தனது உயர்கல்விக்கு பெரிதும் துணை நின்ற பெற்றோர், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நவனீத் குறிப்பிட்டார்.

தற்போது முனைவர் பட்டத்தையும் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நவனீத் மனிதவள நிர்வாகம் குறித்து பல பயிலரங்குகளை நடத்தியும் எழுத்து வடிவிலான தெளிவுரைகளை எழுதியும் வந்துள்ளார். தற்போது அவர் முனைவர் பட்டத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

சட்டத்துறை, நிர்வாகம், வணிகம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மருத்துவம் தொடர்பான வணிகத்திலும் மிக விரைவில் நவனீத் ஈடுபட இருக்கிறார்.

கடந்த 19/2/2022 ஆம் நாள் புத்ரா உலக வாணிப மையத்தில் நடந்த இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 7,549 பேர் பட்டம் பெற்றனர்.