55 ஆண்டுகளுக்கு முன் பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!

துணைக் கண்டம் என்று சொல்லப்படும் இந்தியாவின் அரசியலில், கூட்டணித் தத்துவத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தி, யானை வலிமை கொண்டிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தி, முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றை அண்ணா நிகழ்த்திக் காட்டினார்.

இதில் எலியும் பூனையுமாக இருந்தவர்களை யெல்லாம், ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தார் அண்ணா;

குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்து, தமிழ் மாணவர்களின் கல்வி வாய்ப்பை மழுங்கடித்து அப்பாவின் தொழிலையே செய்யும்படி மாணவர்களை அரை நேரப் பள்ளியுடன் வீட்டுக்கு அனுப்பிய ராஜாஜி, ஆயிரக் கணக்கான ஆரம்ப பாடசாலைகளை மூடினார்.

இது, ஏறக்குறைய அன்றைய ‘நீட்’ கல்வி முறை; அப்படிப்பட்ட ராஜாஜி, இந்திய முஸ்லீம் லீக் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத், பொதுவுடைகை(கம்யூனிச)க் கட்சியினர் உள்ளிட்ட எதிரும் புதிருமான கட்சிகளை யெல்லாம் இணைத்துக் கொண்டு அண்ணா தேர்தல் களம் கண்டார்.

RS Bharathi on Twitter: "மார்ச் 6, 1967ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா தலைமையிலான  கழக ஆட்சி முதல் முறையாக பொறுபேற்ற நாள். #DMK #arignarannaforever  https://t.co/eFPTSH5j8w" / Twitter

இதில், மாபெரும் விந்தை என்னவெனில் இந்தியா விடுதலை பெற்று 1967-இல் நடைபெற்ற அந்த நான்காவது பொதுத் தேர்தலின்போது, தந்தை பெரியார் அண்ணாவையும் திமுக கூட்டணியையும் எதிர்த்து நின்றதுடன், பச்சைத்தமிழர் காமராசரின் கை ஓங்கவும் பக்தவச்சலம் ஆட்சி தொடரவும் ஏதுவாக தமிழக வாக்காளர்கள் காங்கிரஸ் ஆட்சி தொடர ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டு திவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

137 தொகுதிகளுடன் திமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன், தன்னைச் சந்திக்க அண்ணாதுரை வருவார் என்று ராஜாஜி எதிர்பார்த்திருந்த நிலையில், அறிஞர் அண்ணாவோ பெரியாரைச் சந்திக்க திருச்சிக்குப் புறப்பட்டார்.

தன்னைக் காண அண்ணா வருகிறார் என்று அறிந்ததும், எந்த அண்ணாவையும் அவரின் தம்பிமாரையும் கண்ணீர்த் துளிகள் என்று பெரியார் வசைபாடினாரோ, அதே அண்ணாவை வரவேற்க..,

“இன்னும் நேரம் ஆகும் ஐயா” என்று உடன் இருந்தவர்கள் எடுத்துச் சொன்னதையும் பொருட்படுத்தாமல் வாசலில் காத்திருந்து, தன் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடிய வண்ணம் அண்ணாவை வரவேற்றார் பெரியார்.

பிரதமர் அன்னை இந்திரா காந்திக்கு தூக்கமில்லா இரவை ஏற்படுத்தி, திமுக-வை ஆட்சி அரியணையில் அண்ணா பெருந்தகை அமர்த்திய நாள் 1967 மார்ச் 06.

பேரறிஞர் அண்ணாவின் வருகையால் மலையகத்தில் எழுந்த தாக்கம் | Selliyal -  செல்லியல்

தேர்தலுக்கு முன், கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது, அண்ணாவின் காதோரத்தில் கலைஞர் மு.கருணாநிதி ஏதோ கமுக்கமாக சொன்னதைக் கண்ட ராஜாஜி,

“என்ன.. என்ன” என்று கேட்டு, “எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லுங்கள்” என்றார்.

“ஓன்றும் இல்லை ஐயா, தம்பி சொல்வது என்னவென்றால், திமுக அறுதிப் பெரும்பனமைப் பெற்றால், திமுக தனித்தே ஆட்சி அமைக்க வேண்டும்; அந்த நிலையில் கூட்டணி ஆட்சிபற்றி யாரும் கோரிக்கை வைக்கக்கூடாது என்று ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என்கிறார்” என்று அண்ணா நயம்பட சொன்னார்.

“அதற்கென்ன, தாராளமாக சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று ராஜாஜி ஒப்புதல் அளித்ததை யெண்ணி, தேர்தலில் வென்றதும் தன்னைச் சந்திக்க வராமல் தந்தைப் பெரியாரை சந்திக்க திமுக-வினர் சென்ற நிலையில், ராஜாஜி, தான் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கக் கூடாதோ என்று அந்த நேரத்தின் தன்கூட இருந்தவர்களிடம் சொல்லி புலம்பினாராம்.

அதேவேளை, காவிரி நீர்ப் பிரச்சனைக்கும் கச்சத் தீவு சிக்கலுக்கும் இந்திரா காந்தி அடித்தளம் இட்ட ‘தமிழ்த் துரோக’ நாளும் ஏறக்குறைய அதே நாள்தான் என்பது பின்னர்தான் தெரியவந்தது.