சுங்கை சிப்புட், ஜூன் 27

மலேசிய இந்தியர்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்றுத் தலைவராக இருந்து மறைந்த துன் வீ. தி. சம்பந்தனின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் வழிபாடு சுங்கை. சிப்புட் , சுங்கை குருடா தோட்டத்தில் நடைபெற்றது.

நாடு சுதந்திரம் அடைவதற்காக தனது இளம் வயதிலேயே போராட்டக் களத்தில் இறங்கி அந்நாளின் தலைவர்கள் துணையோடும் , ஆதரவோடும் இந்நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான நகர்வுகளால் ஈர்க்கப்பட்ட துன் வீ. தி. சம்பந்தன் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் இந்தியராவார்.

அவர் ஆற்றிய சேவையை நினைவாக கூறும் வகையில் சுங்கை சிப்புட்டில் ஆண்டு தோறும் இவரின் நினைவு நாள் வழிபாடு முன்னெடுக்கப்படும்.

சுங்கை சிப்புட்டில் இந்த நிகழ்வை ஆண்டு தோறும் எழுத்தாளர் பூ. அருணாசலம் ஏற்பாட்டில் நடைபெற்று வந்தது. அவரின் மறைவுக்குப் பின்னர் சுங்கை சிப்புட் தொகுதியில் உள்ள சமுக நலமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கி. மணிமாறன் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள், ஆசிரியர் மணி இரா. மாணிக்கம் உட்படப் பலர் துன் சம்பந்தனின் சேவை நினைவு கூர்ந்தனர்.

இந்த நிகழ்வில் மாநில தகவல் துறை இயக்குநர் துவான் ஹாஜி முகமட் தையிப் உபா சிறப்பு வருகை அளித்து ஆற்றிய உரையில் இந்த நாட்டில் மூவினங்களின் பிரதிநிதிகளும் இணைந்து சுதந்திர உடன்பாட்டில் கையெழுத்திடவேண்டும் என்பது ஒப்பந்தம். நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றிய மாபெரும் தலைவர் துன் சம்பந்தன் என்று புகழாரம் சூட்டினார்.

இதில் மூத்த தலைவர்கள், பிரமுகர்கள் , தோட்டத் தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்