தஞ்சை, ஜூன் 28- 

தஞ்சையில் தொழில் முனைவர்களைச் சந்தித்து, மலேசிய நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக நடந்தது. இதில் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம் சரவணன் முதன்மை பிரமுகராகக் கலந்து கொண்டார்.

இன்று உலகம் முழுதும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து உலக வல்லரசாக உருவாக்க வேண்டும் என்ற கருத்தை அமைச்சர் முன்வைத்தார்.

இனிவரும் காலங்களில் 70% விளைநிலங்கள் மேம்பாடு காணும்;70% தொழில்நுட்பம் சார்ந்து இருக்கும்; 50 ஆண்டுகளில் இயற்கை வளங்கள் குறையும். இப்படி ஏற்படக்கூடிய நிகழ்கால மாற்றங்களையும், எதிர்காலச் சவால்களையும் நாம் அறிந்து, உணர்ந்து வாழ வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற்ற சமுதாயமாக உருவாக முடியும் என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.