கோலாலம்பூர் ஜூலை 25-

கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கட்சித் தலைமைக் குழுவின் (எம்பிபி) உறுப்பினர்களாக சரஸ்வதி கந்தசாமி, ஜி.மணிவாணன், ஆர்.உவனேஸ்வரன் ஆகியோரை நியமனம் செய்தமைக்கு வாழ்த்துகள்.

கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேசியத் தலைவரின் அதிகாரங்களை நாம் அனைவரும் அறிவோம். நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் MPP உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்க, தேசியத் தலைவர் தயாராக இருந்ததைப் பாராட்டுகிறோம்.

இந்த நியமனத்தின் வழி, கட்சிக்கு எங்களின் பங்களிப்பை தலைமைத்துவம் ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருந்ததில்லை என்பதை இந்திய சமூகத்திற்கு வெற்றிகரமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வேட்பாளரை தேர்தல் நேரத்தில் பரிந்துரைக்காததால் சிலர் வருத்தம் அடைந்தாலும், கட்சியின் அரசியலமைப்பு அதிகாரத்தின் அடிப்படையில் நிலைமையை சரிசெய்வதில் தேசியத் தலைவர் செய்திருக்கும் நியமனங்களானது, நீதிக்கான போராட்டத்தில் பிகேஆர் எப்போதும் ஒத்துப்போகிறது என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது.

எம்பிபி-க்கு நியமிக்கத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல, ஆனால் 15வது பொதுத் தேர்தலில் பிகேஆரை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்கு அந்த நபர்களின் நம்பகத்தன்மையையும் தகுதியையும் தேசியத் தலைவரின் தலைமை பரிசீலித்து மதிப்பீடு செய்திருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

நமது கட்சி இயந்திரத்தை வலுவிழக்கச் செய்யும் கேள்விகள் இனி எழாது என்று நம்புகிறேன், ஏனெனில் பதவி என்பது மக்களின் ஆணையின் சுமையாகும், பெருமைக்காக அல்ல!

கலைச்செல்வன் ஜெகநாதன்
உலுசிலாங்கூர் AMK துணைத் தலைவர்