காஜாங் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் அவினாஷ் டாக்டர் செல்வராஜா லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம் பொதுத் தேர்வுகளில் மிகச் சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்திருந்தார்.

தமது தொடக்கக்கல்வியை தமிழ்ப்பள்ளியின் பயின்ற இவர் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்று தமிழ்ப்பள்ளிக்கு பெருமை சேர்ந்த்துள்ளார். ஆரம்பக்கல்வியை தாய்மொழியின் கற்றதுதான் தமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததாக அவினாஷ் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தமது தாய் தந்தையின் தளராத ஊக்கம், ஆசிரியர்களின் மகத்தான வழிகாட்டல்தான் தமது இலட்சியத்தை எட்டுவதற்கு துணை புரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நிலையில் பல்வேறான சாதனைகளை புரிந்து வருகிறார். அந்த வரிசையில் தமது மகன் அவினாஷும் இடம் பிடிக்க மஇகா உலு லாங்காட் தொகுதி தலைவரான டாக்டர் செல்வராஜாவும் தொடர்ந்து உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.