அறிவிப்பாளர்கள் (அஹிலா & கோகுலன்)


இந்த ஆண்டில் உங்களின் தீபாவளி கொண்டாட்டத் திட்டங்கள் யாவை?


அஹிலா: குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒரு நெருக்கமானக் கொண்டாட்டம் என்றுதான் கூறுவேன். தீபாவளியும் என் பிறந்தநாளும் ஒரே நாள் என்பதால் எனக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம்.
கோகுலன்: எனதுச் சொந்த ஊரில் எனதுக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவேன். ஒரு வேடிக்கையான மற்றும் உற்சாகமானக் கொண்டாட்டமாக இருக்கும்.

இரசிகர்களுக்கான ராகாவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?


அஹிலா: இவ்வாண்டின் தீபாவளி இசைக் காணொளியை எண்ணி நாங்கள் உற்சாகமாக உள்ளோம். ‘கலக்கல் காலை’ பிரிவின் போது எங்களுடன் இணைந்துத் தங்கள் தீபாவளி நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளும் மலேசியக் கலைஞர்களின் அற்புதமான அங்கமும் எங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டும்மின்றி, எங்கள் இரசிகர்களுக்குச் சிறப்புத் தீபாவளி விருந்தாகச், சிங்கப்பூர் தமிழ் வானொலியான ஒலி எப்.எம் உடன் நேரலையிலும் ஈடுப்படுவோம்.
கோகுலன்: இந்தப் பண்டிகைக் காலத்தில் தீபாவளிப் பாடல்களைக் நேயர்கள் கேட்டு மகிழலாம்.

இரசிகர்களுக்கான உங்களின் தீபாவளி செய்தி/வாழ்த்துக்களைப் பகிரவும்.


அஹிலா: இந்த ஆண்டு தீபாவளி நம் அனைவருக்கும் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாகக் கோவிட்க்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தைச் செவ்வெனப் பயன்படுத்துவோம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஓர் அற்புதமானக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனியத் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கோகுலன்: இனியத் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தீபாவளியை #இணைவோம்இணைப்போம் என்றக் கருப்பொருளுடன் கொண்டாடும் வேளையில், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் நமதுப் பிணைப்பைத் தழுவி அவர்களுடன் ஒன்றிணைவோம்