காஜாங், அக்.23-
தீபாவளி பண்டிகை காலத்தில் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி வாகனமோட்டிகளுக்கு காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் ஆலோசனை கூறினார்.


விழாக்காலங்களில் தங்களின் அன்புக்குரியவர்களோடு சாலைகளில் பயணம் செய்யும் இதர பயனீட்டாளர்களின் நலன்களையும் வாகனமோட்டிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


தீபாவளித் திருநாளை தங்கள் குடும்பத்தோடும் உற்றார், உறவினர், நண்பர்களோடும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்படி கேட்டுக் கொண்ட லோய் சியான் நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவருக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.