கோலாலம்பூர், அக். 23-

தித்திக்கும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மலேசியாவில் உள்ள அனைத்து இந்து பெருமக்களுக்கும் ஐபிஎப் மகளிர் அணி தலைவி பி.ராஜாம்மாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இன்பம் பொங்கும் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எல்லா துறைகளிலும் முன்னேறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயம் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்க இந்த திருநாளில் நாம் உறுதி கொள்வோம்.

இந்த வேளையில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும்  தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.