வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் சங்கீதா!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் சங்கீதா!

கோலாலம்பூர், செப். 25-
மலேசிய இந்திய சினிமாத்துறையில் தனக்கென முத்திரையை பதித்துள்ள சங்கீதா கிருஷ்ணமூர்த்தி 29ஆவது மலேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிக்கைக்கான விருதை அடிவீராக்கு படத்தில் நடித்தற்காக பெற்றுள்ளார்.

அண்மையில் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற இந்த விருது விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஓ.எல். பிக்சர்ஸ், ஐஸ்பெர்க் டிசைன், பிலிம்மெக்கா ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் எரிக் ஓங் இயக்கத்தில் ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகிய மும்மொழிகளில் உருவான அடிவீராக்கு திரைப்படம் மேலும் சிறந்த உண்மை கதை, சிறந்த படம் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளது.

இப்படம் ரெடா, இண்டர்சேஞ்ச், ஹாஞ்சூட், டெசோலாசி ஆகிய படங்களை பின்னுக்கு தள்ளி இந்த விருதுகளை குவித்துள்ளது. இந்த படத்தில் சங்கீதா ஓர் ஆசிரியையாக நடித்துள்ளார். மலேசிய தமிழ்ப்படங்களான வெண்ணிற இரவுகள், வெட்டி பசங்க, மறவன் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தியுள்ளார். குறிப்பாக, வெண்ணிற இரவுகள் படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் பாராட்டையும் பெற்ற இவர் அடிவீராக்கு படத்திலும் தனது ஆசிரியை கதாபாத்திரத்தை அருமையாக நடித்துள்ளார்.

அடுத்து அவரது நடிப்பில் கம்பத்து கண்ணம்மா, என்னவள் முதலான படங்கள் வெளியாகவுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருக்கும் சங்கீதாவிற்கு அனேகன்.கோம் இணையத்தள செய்தி பதிவேடு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன