புத்ரா ஜெயா, மார்ச் 15-

இவ்வாண்டில் மேற்கொள்ளப்படும் சமூக நல திட்டங்கள் மற்றும் கல்வி திட்டங்கள் தொடர்பில் மலேசிய தெலுங்கு சங்கம் இன்று மனித வள அமைச்சர் வ.சிவகுமாரை சந்தித்து மகஜரை வழங்கியது.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் வெங்கெட் பிரதாப், துணை தலைவர் சத்தியா சுதாகரன், உதவித் தலைவர் திருமதி வீரலெட்சுமி மற்றும் தலைமைச் செயலாளர் சிவசூரியா நாராயணன் ஆகியோர். மனித வள அமைச்சரை சந்தித்து உரையாடினர்.

ஒவ்வோர் ஆண்டும் மலேசிய தெலுங்கு சங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் மூலம் மக்கள் எந்த வகையில் நன்மை அடைகிறார்கள் என்பது குறித்து மனித வள அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் கலை கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை கொடுத்து வரும் மலேசிய தெலுங்கு சங்கம் இவ்வாண்டில் பல சமூக நல திட்டங்களை வகுத்து இருப்பதாக அதன் தலைவர் டாக்டர் வெங்கெட் பிரதாப் தெரிவித்தார்.

மனித வள அமைச்சர் சிவகுமாருடன் நடத்தப்பட்ட சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அவர் சொன்னார்.

இந்த சந்திப்பில் மனித வள அமைச்சர் சிவகுமாரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன் மற்றும் தனிப்பட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்