மாநில தேர்தல்:கெஅடிலான் உலு சிலாங்கூர் டிவிஷன் ஆயத்தம்

180

  

உலு சிலாங்கூர், மே 10-

மாநில தேர்தல் கேந்திரம் மற்றும் பல்வேறு நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காகடாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையிலான  கெஅடிலான் உலு சிலாங்கூர் டிவிஷன் கூட்டம் ஒன்றை நடத்தியது.

இங்குள்ள கெஅடிலான் டிவிஷன் அலுவலகத்தில் நடைபெற்ற  இந்த டிவிஷனின்   அரசியல் பிரிவு   கூட்டத்தில்  14 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாநில தேர்தல், நகராண்மைக்கழக உறுப்பினர்களுக்கான திட்டங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் மற்றும்  இந்த டிவிஷனின்  துணைத் தலைவர் சைஃபுடின் ஷாஃபி முகமது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் சபுனா அனுவார், ப.புவனேஸ்வரன், எம் எல் வோங், நூர் ஜஹீரா  மற்றும் அயில்வின் ஸேன்ஹீ ஆகியோரோடு டிவிஷன் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.