தேசிய நீரோட்டத்தில் இந்தியர்கள் விடுபடாமல் இருப்பதை மஇகா உறுதிப்படுத்தும்!டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

206

கோலாலம்பூர், மே 12-

இந்தியர்கள் தேசிய நீரோட்டத்தில் இருந்து பின் தங்கிவிடாமல் இருப்பதற்கு ம இகா தனது ஆக்கப்பூர்வ பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றி வரும் என்று இக்கட்சியின் தேசிய  தலைவர்  டான் ஸ்ரீ  எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் நலன் காக்க மஇகா என்ற ஒரு கட்சி அவசியம் தேவை என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்  அண்மையில்  நடந்த சந்திப்பு ஒன்றில் தம்மிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

ம இ கா இந்திய சமூகத்தின்  நலனில் கொண்ட அக்கறை காரணமாக இச்சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இதன் பொருட்டு தமது தலைமையிலான அரசாங்கம்  கட்சி மேற்கொள்லும் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுக்கும் என்றும்  பிரதமர்  கூறியுள்ளார்.

“குறிப்பாக, கல்வி  மேம்பாட்டிற்காக  மஇகா  மேற்கொண்டு  வரும் முயற்சிகளுக்கு  தமது  அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று பிரதம்ர் வாக்குறுதி அளித்துள்ளார்” என்று இங்குள்ள  மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற இக்கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

தவிர, தமது தலைமைத்துவத்தின் கீழ் இந்தியர்களின் நலன்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என்றும்  பிரதமர் உறுதி அளித்திருப்பதாக  டான் ஸ்ரீ  விக்னேஸ்வரன்  மேலும் சொன்னார்,

இதன் பொருட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மஇகா தனது வற்றாத ஆதரவை வழங்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதை  அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, ஆண்டுக் கூட்டத்தை நடத்துவதற்குப் போதிய கோரம் கொண்டிராத நிலையில் 800 கிளைகள் உள்ளதாகவும் இந்தக் கிளைகளுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குவதற்காக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய தலைவர் கூறினார்.

 விரைவில் நடைபெறவிருக்கும் மாநில தேர்தல்களில் ம இகா போட்டியிடும் என்றும் அவர்  சொன்னார்.