மக்கள் குறைகளை கேட்டறியும் நிகழ்வு: அமைச்சர் சிவகுமாரை நேரில் காண மக்கள் திரண்டனர்

119

புத்ரா ஜெயா மே 18-
மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் குறைகளைக் கேட்டறியும் நிகழ்வு இன்று இங்குள்ள் ஐஒஐ சிட்டி மோல் பேரங்காடியில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பொதுமக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனித வள அமைச்சர் வ. சிவகுமாரிடம் முன் வைத்தனர்.

பிறப்பு பத்திரம், குடியுரிமை, வழிபாட்டு தலங்களுக்கு மானியம், சிறுதொழில் தொடங்க நிதியுதவி,சொக்சோ சமூக நல நிதியுதவி, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி, முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசியர்கள் சங்கத்திற்கு நிதியுதவி உட்பட பல பிரச்னைகளை அமைச்சரிடம் மக்கள் முன் வைத்தனர்.

மக்கள் குறைகளை மிகவும் கவனமாகக் கேட்டறிந்த அமைச்சர் சிவகுமார் இவற்றிக்குப்படிப்படியாக தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.