அரசு மானியம், கடனுதவி திட்டங்கள் மீதான மாநாடு:வர்த்தகர்களுக்கு கோலாலம்பூர்& சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனம் அழைப்பு

120

கோலாலம்பூர், மே 23-

தலைநகரில் அடுத்த மாதம்  அரசாங்க  மானியம்  மற்றும்  கடனுதவி திட்டங்கள் மீதான மிகப் பெரிய  மாநாடு ஒன்று  நடைபெறவிருக்கிறது.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர்  இந்திய வர்த்தக சம்மேளனம் முதன் முறையாக ஏற்பாடு செய்திருக்கும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பயனடையும்படி நாட்டிலுள்ள  சிறு  மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இம்மாநாடு வரும் ஜூன் 9 ஆம் தேதி காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை தலைநகர், கொம்ளெக்ஸ் கெராஜாஹான், மெனாரா மிட்டி, பெர்டானா அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இதில் தொழில் முனைவர் , கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் சிறப்பு வருகை புரிவார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கட்டணம் 150 வெள்ளியாகும். சிறப்பு கழிவு மே 26ஆம் தேதி வரை மட்டுமே.

வர்த்தகத்தைத்  தொடங்க விருப்பம் கொண்டிருப்போர்,  சிறு வியாபாரிகள், சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், பெரிய வர்த்தகத்தில் ஈடுபடிருப்போர் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர்  இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

பதிவுக்கு https://forms.gle/5dr13nW7zVPaUiqC9