புக்கிட் ஜாலில் அரங்கைக் கலக்கத் தயாராகிவிட்டார் தேவிஸ்ரீ பிரசாத்!

102

கோலாலம்பூர், மே  24-

மலேசிய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும்   ‘ஊ சொல்றியா டூவர்’ இசை நிகழ்ச்சி அதன் நாயகன்  தேவிஸ்ரீ பிரசாத் நேற்று தலைநகர் வந்தடைந்ததைத் தொடர்ந்து களை கட்டத் தொடங்கிவிட்டது.

மே 27 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இந்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

பிரபல இசையமப்பாளரும் பாடகருமான டிஎஸ்பி என சுருக்கமாக அழைக்கப்படும் தேவிஸ்ரீ பிரசாத் உலகம்  முழுமையும் தனக்கென  தனி  ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ளார்.

டிஎஸ்பி என சுருக்கமாக  அழைக்கப்படும் இவரின் இசை ரசிகர்களின் மனதைக் கொள்ளும் கொள்ளும் அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. அதே சமயம்,  இவர் இசையமைக்கும் பாடல்கள் புகழ்ப்பெற்ற  பாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுவிடும் என்பது மற்றொரு சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புக்குரியவர்  டிஎஸ்பி. இவரின் திறமையை நேரில் பார்த்து ரசிக்கும் ஒரு வாய்ப்பு மலேசிய ரசிகர்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.

வரும் சனிக்கிழமை  இவரின்  ‘ஊ சொல்றியா டூவர்’ இசை நிகழ்ச்சியில் டிடி நீலகண்டன், எண்றியா ஜெராமியா, ராஹுல் நம்பியார், ஹரிப்பிரியா போன்ற புகழ்ப்பெற்ற தென்னிந்திய கலைஞர்களோடு அறிவிப்பாளர் ஜெஸ், பாலன் காஷ்மீர், சந்தேஷ் போன்ற உள்ளூர் கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நல்ல இசை நிகழ்ச்சியைக் கண்டு களிக்க விரும்புவோரின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு நிகழ்ச்சியாக  ‘ஊ சொல்றியா டூவர்’ இசை நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Ticket2u.com.my  வழி டிக்கெட்டுகளைப் பெற்று ஆயிரக்கணக்கான ரசிகர்களோடு சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு   சேர்ந்து  கண்டு களிக்கத் தவற வேண்டாம் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.