தலைநகரில் பாடகர் கார்த்திக்கின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

106

கோலாலம்பூர், மே 24-

பல மொழிகளில் இதுவரை  8,000 திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகரான கார்த்திக் விரைவில் தலைநகரில் பிரம்மாண்ட   இசை நிகழ்ச்சி ஒன்றைப் படைக்கவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 10 ஆம் தேதி தலைநகர், சுங்கை வாங் பிளாசா, மேகா ஸ்டார் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, இந்தி  என பல  மொழிகளில் பாடும் திறமை பெற்ற பாடகர்களின் பட்டியலில்  கார்த்திக்கும் ஒருவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு தனி ஈர்ப்பு கொண்டவை. இச்சிறப்புத் தன்மையே   ஏகோபித்த ரசிகர்களை இவர் வசம்  கவர்ந்துள்ளன.

பண்பட்ட பாடகரான கார்த்திக் முதன் முறையாக மலேசியாவில் இன்னிசை நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சியில்  ரசிகர்கள் எதிர்பார்க்கும் இவரின் புகழ்ப்பெற்ற பாடல்கள்  இடம் பெறும் என்பது நிச்சயம். 

மை இவன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பாடகர் கார்த்திக்கின் இன்னிசை நிகழ்ச்சிக்கான  டிக்கெட்டுகளை ticket2u வழி பொது மக்கள் பெறலாம்.

டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்குவோருக்கு சிறப்புக் கழிவு உண்டு.