செந்தோசா சட்டமன்ற தேர்தல் கேந்திரம் தொடக்க விழா கண்டது!

141

கிள்ளான் , ஜூலை 11-

சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் கேந்திரம், முதன்மை நடவடிக்கை அறை ஆகியவை ஏக காலத்தில் தொடக்கி வைக்கப்பட்டன.

செந்தோசா சட்டமன்ற தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியை விவசாய மற்றும் உணவு உத்தரவாத துறை அமைச்சரும் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹாஜி முகமது சாபு நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் புக்கிட் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ சீ, வர்த்தக பிர்முகர் ஓம்ஸ் பி. தியாகராஜன் மற்றும் முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய குடிநீர் சேவை ஆணையத்தின் (ஸ்பென்) தலைவருமான சார்லஸ் சந்தியாகோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சிங்க நடனம், சிலம்பம் மற்றும் சீலாட் தற்காப்புக் கலை போன்றவை இடம் பெற்றன.

சிலாங்கூர் முழுமையும் இருந்து பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் 600 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் சிலாங்கூர் அரசாங்கத்தை பக்காத்தான் தக்க வைக்கும் அளவுக்கு மாநிலத் தேர்தலில் இது மகத்தான வெற்றியைப் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.