பட்டர்வொர்த்தில் மின்னியல் விளையாட்டு போட்டி!

277

பட்டர் வொர்த், ஜூலை 17-
மின்னியல் விளையாட்டு என்பது தொழில்முறை போட்டிகளில் விளையாடப்படும் வீடியோ விளையாட்டு ஆகும்.

சண்டை போடும் விளையாட்டு, ஃபெர்ஸ்ட் -பெர்சன் ஷூட்டர்ஸ், ரியல் -டைம்ஸ் ஸ்டெரஜி , மல்டிபிளேயர் ஆன்லைன் போன்ற மின்னியல் விளையாட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை.

உலகெங்கிலும் உள்ள வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுப் பரிசுகளை வெல்ல காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது மலேசியாவிலும் மின்னியல் விளையாட்டு பிரபலம் அடைந்து வருகிறது.

அந்த வகையில் பினாங்கு பட்டர் வொர்த் அரினா அரங்கில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச் ஆர் டி கார்பரேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மின்னியல் விளையாட்டுப் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று அசத்தினர்.

போட்டியை தொடக்கி வைக்க சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இப்போட்டியில் இளைஞர்களின் திறமையை பார்த்து வியந்து போனார் .

எச் ஆர் டி கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் தலைமையில் இப்போட்டி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.