காஜாங், ஜூலை 30-
வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

அவ்வகையில் காஜாங் சட்டமன்ற தொகுதியில் மூவர் போட்டியிடுகின்றனர். பி.கே.ஆர். சார்பாக டேவிட் சியோங், பெரிக்காத்தான் சார்பாக லியூ சின் கிம் மற்றும் பி.எஸ்.எம். கட்சியின் துணைத் தலைவர், அருட்செல்வன் ஆகியோரே அம்மூவர்.


இந்த வேட்புமனுத் தாக்கல் காஜாங், சௌஜானா இம்பியான், டேவான் செம்பாக்காவில் நடைபெற்றது.