எதிர்க்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தில் மயங்கி விடாதீர்கள்! வாக்காளர்களுக்கு அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

80

ஷா ஆலம், ஆக 7-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலேசியர்கள் தொடர்ந்து முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தில் மதிமயங்கி விட வேண்டாம் என்று மக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.

மலேசியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே நாட்டில் சுபிட்சம் நீடிக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதன் காரணமாக அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இப்போது மலேசியாவில் முதலீடு செய்து வருகிறார்கள்.

பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி இடையிலான ஒற்றுமை அரசாங்கம் மக்களை அரவணைத்து ஆட்சி புரிந்து வருகிறது.

வெறுப்புணர்வை தூண்டும் அரசியல்வாதிகளை புறக்கணித்து விட்டு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அமோக வெற்றி பெற வாக்களிக்கும்படி கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே நேற்று கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மனிதவள அமைச்சர் சிவகுமாரும் வேட்பாளர் பிரகாஷும் கலந்து கொண்டனர்.