காஜாங், ஆக.7-
வெள்ளப் பிரச்சனை, மக்களின் சமூகநலன்கள், விளையாட்டு மற்றும் இளம் தலைமுறையினரின் கட்டமைப்புகள், சுகாதார மற்றும் பண்பாட்டுத் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் தாம் கவனம் செலுத்தவிருப்பதாக வரும் சட்டமன்றத் தேர்தலில் காஜாங் தொகுதியில் போட்டியிடவிருக்கும் பி.கே.ஆர். வேட்பாளர் டேவிட் சியோங் உறுதியளித்தார்.
“காஜாங் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, பி40 மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகப் போராடுவேன்.
காஜாங் நகரில் உள்ள சிறு வர்த்தகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் நான் கவனம் செலுத்துவேன். இளம் தலைமுறையினருக்கான விளையாட்டு, கேளிக்கை விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துவேன்” என்றார்.
இதன் வழி சிலாங்கூர் மாநிலத்தின் சுற்றுலா முனையமாக காஜாங்கை மேம்படுத்துவது மட்டுமின்றி இங்கு பொருளாதார நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி காஜாங்கிற்குப் பெருமை சேர்ப்பேன் என்று காஜாங், சுங்கை சுவாவிலுள்ள ஜெயஸ்ரீ உணவகத்தில் இந்தியர்களைச் சந்தித்து பேசிய போது டேவிட் சியோங் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பு கூட்டத்தில் காஜாங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியானும் கலந்து கொண்டார்