‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 202 இல் ஒளிபரப்பு

39

உற்சாகமான, நடைமுறைப் பயணக் குறிப்புகளுடன் உள்ளூர் தமிழ் பயணத் தொடர்

கோலாலம்பூர், ஆகஸ்டு 9

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு எனும் உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் புதியச் சீசனை ஆகஸ்டு 15, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். கடந்த ஆண்டில் முதல் ஒளிபரப்புக் காண்ட முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, சீசன் 2 தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியா ஆகிய இரு பகுதிகளைச் சார்ந்த பயணக் குறிப்புகளை இரசிகர்களுக்கு வழங்கும்.

கோலாலம்பூர், சுங்கை பெசார், நெகிரி செம்பிலான், பினாங்கு, பெர்லிஸ், கபாஸ் தீவு, ஃபிரேசர் மலை, கோத்தா கினபாலு, குண்டாசாங், கிள்ளான், லங்காவி, கூச்சிங் மற்றும் மீரி ஆகிய சுற்றுலாத் தலங்களைச் சார்ந்த பயனுள்ள மற்றும் நடைமுறை உதவிக்குறிப்புகளை இந்தப் புதியச் சீசனில் உள்ளூர் சுற்றுப்பயணத் திட்டங்களை மிக மலிவான முறையில் திட்டமிடும் பயண ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பார்க்கலாம். உள்ளூர் திறமையாளர் சுகின் சார்லஸ் இயக்கிய மற்றும் பிரபல உள்ளூர் கலைஞர், ராபிட் மேக் தொகுத்து வழங்கும், கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு, பல்வேறுச் சாகசங்கள் மற்றும் கவர்ச்சிகரமா சுற்றுலாத் தலங்களை ஆராய்வதற்கான 13 அத்தியாயங்களை இரசிகர்களுக்கு வழங்கும். ஒவ்வொரு தலத்திலும் எளிதாகக் கிடைக்கப்பெறும் சுவையான உள்ளூர் உணவு வகைகள், மலிவான தங்குமிட வசதிகள், நினைவுப் பொருட்கள் மற்றும் பலவற்றை இந்த மதிப்புமிக்கத் தகவல்கள் சித்தரிக்கும்.கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு சீசன் 2 தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு செவ்வாய், இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். சீசன் 1-இன் அனைத்து அத்தியாயங்களையும் எப்போதும் ஆன் டிமாண்ட் மூலம் ஸ்ட்ரீம் செய்யுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.