ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 202இல் உள்ளூர் தமிழ் ஓநாய் தொடர் ‘பூரணச்சந்திரன் குடும்பத்தார்’

29

கோலாலம்பூர், ஆகஸ்டு 30 –

பூரணச்சந்திரன் குடும்பத்தார் எனும் சிலிர்ப்பூட்டும் முதல் உள்ளூர் தமிழ் ஓநாய் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தற்போது கண்டு மகிழலாம்.

புகழ்பெற்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர், அசிசானால் இயக்கப்பட்டுத், தயாரிக்கப்பட்ட இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடர் கடந்த ஆகஸ்ட் 28 தொடங்கி இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

பூரணச்சந்திரன் குடும்பத்தார் பிரபலமான மற்றும் வளர்ந்து வரும் உள்ளூர் திறமைகளான லோக வர்மா, திலிப் குமார், குபேன், புனிதா, கர்ணன் மற்றும் பலரைத் தாங்கி மலர்கிறது. ஆல்பா ஓநாய்களின் கடைசி வம்சமான ஜேக்கப் மற்றும் அவரது மனைவி அவான், அவர்களின் பாரம்பரியம் தொடர்வதை உறுதிச் செய்யப் பீட்டரை ஓர் ‘ஓமேகா’ ஓநாயாக மாற்றுவதை இந்த 20-அத்தியாயத் தொடர் சித்தரிக்கின்றது. அலெக்ஸாண்ட்ராவை மணந்தப் பீட்டர், தங்கள் குழந்தைகளான ஜார்ஜ் மற்றும் ஏஞ்சலின் தங்களைப் பற்றிய உண்மையை அறியாமல் இருப்பதை உறுதிச் செய்ய அவர்களுக்கு இரவில் கடுமையான ஊரடங்கு உத்தரவை விதிக்கிறார் – பீட்டரும் அவரது மனைவியும் அந்த இரகசியத்தை மறைக்க முடிந்ததா அல்லது உண்மை வெளிப்பட்டதா என்பதுதான் கதையின் சாராம்சம்.

பூரணச்சந்திரன் குடும்பத்தார் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.