கோலாலம்பூர், ஆக.31-
‘பனாஸ் டோக் வித் விகடகவி’ நிகழ்ச்சியின் அத்தியாயம் பதின்மூன்று தொகுப்பாளருடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலை இங்கு காண்போம்.
செயின்ட், அத்தியாயம் பதின்மூன்று தொகுப்பாளர்:
- உங்களின் பின்னணியைப் பற்றிக் கூறுக.
உள்ளூர் மற்றும் சர்வதேசத் தமிழ் வானொலி நிலையங்களில் 49 பாடல்கள் ஒலியேருவதோடு ஒலிப்பதிவுக் கலைஞராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் தமிழ் கலைத்துறையின் அனைத்து அம்சங்களிலும் கால் பதித்த ஒரு கலைஞர் நான். நான் தனிப்பட்ட நிகழ்வுகளையும் பிரத்தியேகமாகத் தொகுத்து வழங்குகிறேன், சமீபத்தில் தமிழ் ஸ்டாண்ட்-அப் காமெடியைத் தொடங்கினேன். நான் இந்தியாவின் இரண்டு மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன். அதில் ஒரு பாடலுக்குக் கேரளாவில் ‘ஆண்டின் சிறந்தப் பாடல்’ (ரணம், 2018) என்ற விருதுக் கிடைத்தது. இந்திய நடிகர் அருண் விஜய் நடித்த மாஃபியா (2019) என்ற இந்திய தமிழ் திரைப்படத்திலும் நான் பணியாற்றியிருக்கிறேன்.
- பனாஸ் டோக் வித் விகடகவி நிகழ்ச்சியின் அத்தியாயம் பதின்மூன்றைத் தொகுத்து வழங்கிய அனுபவம் எவ்வாறு இருந்தது?
விகடகவி மலேசியாவின் மிகச்சிறந்த தமிழ் தொகுப்பாளர்களில் ஒருவர் மற்றும் நாற்காலியின் மறுப்புறத்தில் அமர்ந்து ஒரு தொகுப்பாளராக அவரிடம் கேள்விகள் கேட்டது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தாலும் சிறிதளவு பதற்றமும் இருந்தது. கேள்விகளைத் திசைத் திருப்பும் திறனும், தமிழில் உள்ளப் புலமையும் அவரை நிகழ்ச்சியில் பங்கேற்கத் தகுதியான விருந்தினராக மாற்றியது. இறுதி அத்தியாயத்தில் அவர் ‘ஹாட் சீட்டில்’ இருப்பதை அறிந்தப்போது அவர் எப்படி நடந்துக்கொள்வார் என்று எனக்கு ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் அவரதுப் பல வருட அனுபவத்தாலும் தொழில்முறையாலும் அவர் மிகவும் சாந்தமாக இருந்ததைக் காட்டியது. அவர் உண்மையில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டதோடு நிகழ்ச்சியின் வடிவத்தையும் மதித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை முழு தருணமும் என் நினைவில் பசுமரத்தாணிப்போல் பதியும். எனது முன்மாதிரிகளில் ஒருவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
- இந்த நிகழ்ச்சியின் மீதான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?
இந்த நிகழ்ச்சியின் மூலம் பல விருந்தினர்கள் தங்களைச் சார்ந்தச் சர்ச்சைகளை இரசிகர்களுக்குத் தெளிவுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். தங்கள் பக்கம் உள்ளக் கருத்துக்களை அவர்கள் இரசிகர்களுக்கு விளக்குவார்கள் என்றும் நான் நம்புகிறேன். மேலும், நாம் இதுவரைத் தொலைக்காட்சியில் காணாதப் புதிய வடிவத்தை இந்நிகழ்ச்சிக் கொண்டுள்ளதால், முற்போக்கான உள்ளடக்கத்தைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும் போக்கை இரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
- உங்களின் இரசிகர்களுக்காக ஒரு செய்தியைப் பகிரவும்.
தைரியமாக உண்மையைச் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் வலுவானப் பின்தொடர்பவர்கள் என் வசம் உள்ளனர். இந்த நிகழ்ச்சி முக்கியமாக நான் தொகுத்து வழங்கிய அத்தியாயம் அவர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று நினைக்கிறேன். எனவே, எனது இரசிகர்களுக்கு, நான் சொல்வது என்னவென்றால், இதோ நீங்கள் கேட்டது. எனது தொகுத்து வழங்கும் பாணியில் சர்ச்சைக்குரியச் சிக்கல்களை விவாதிக்கும் மிகவும் வித்தியாசமான பாணியை அனைவரும் கண்டு களிக்கலாம்.