உலகம் குறும்படப் போட்டி வெற்றியாளர்கள் & சிறந்த போட்டியாளர்கள் அறிவிப்பு

48

கோலாலம்பூர், செப். 6–

உலகம் குறும்படப் போட்டியின் வெற்றியாளர்களையும் உலகம் குறும்படப் போட்டியின் வெற்றியாளர்களில் தேர்வு பெற்ற சிறந்த 20 போட்டியாளர்களையும் ஆஸ்ட்ரோ அறிவித்தது.

உலகம் குறும்படப் போட்டி

இந்தக் குறும்படப் போட்டியில் 106-க்கும் மேற்பட்டச் சமர்ப்பிப்புகளில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் நிலையில் வாகை சூடியவர் ரிம10,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் சென்றதோடு ஆஸ்ட்ரோவில் திரையிடப்படும் ஒரு டெலிமூவியைத் தயாரிப்பதற்கான அறிய வாய்ப்பையும் பெற்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் முறையே ரிம8,000 மற்றும் ரிம6,000 ரொக்கப் பரிசை வென்றனர். ஏழு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தலா ரிம3,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் சென்றனர். வெற்றியாளர்கள் பின்வருமாறு:

  • முதல் நிலை வெற்றியாளர்: ஹரிந்திரன் த/பெ மனோகரன்
  • இரண்டாம் & மூன்றாம் நிலை வெற்றியாளர்கள்: மகேந்திரன் த/பெ மோகன் மற்றும் முகிலன் த/பெ நாராயணசாமி
  • ஏழு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள்: சதீஸ்நாயர் த/பெ குணாளன், கிருஷ்ணன் த/பெ சுப்பிரமணியம், சித்தார்த்தன் த/பெ வடிவேலு, ரிஷிகேசன் நாயர் த/பெ பாஸ்கரன், நந்தகுமரன் த/பெ ராஜவிஜயன், விஜயகானந்த் த/பெ வடிவேலு, மற்றும் பவித்ரன் த/பெ மோர்கன்

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வெற்றிப்பெற்றக் குறும்படங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டு களிக்கலாம்.

தமிழ் அமுதம்

இந்த தமிழ் பேச்சுப் போட்டியின் சிறந்த 20 போட்டியாளர்கள், நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அடுத்தச் சவால்களில் பங்கேற்கத் தேர்வுச் செய்யப்பட்டனர். ‘சரவெடி நைட் வித் ஆனந்தா & உதயா’ எனும் நேரலை உரை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு இப்போட்டியாளர்கள் போட்டியிடுவதை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் கண்டு இரசிக்கலாம் அல்லது ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எந்த நேரத்திலும் ஸ்ட்ரீம் செய்யலாம். எதிர்கொள்ளும் இச்சவால்களைத் தொடர்ந்து, 3 நவம்பர் 2023, அஜெண்டா சூரியா ஷாப்பிங் கார்னிவல், ஓபன் கார்பார்க் பி, தேசிய விளையாட்டு அரங்கம், புக்கிட் ஜாலில், கோலாலம்பூரில் நடைப்பெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் பங்கேற்கச் சிறந்த 10 போட்டியாளர்கள் நடுவர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ் அமுதம் வெற்றியாளர்கள் கீழே உள்ளவாறு மொத்தம் ரிம10,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:

  • முதல் நிலை வெற்றியாளர்: ரிம5,000 ரொக்கப் பரிசு.
    • இரண்டாம் நிலை வெற்றியாளர்: ரிம3,000 ரொக்கப் பரிசு.
    • மூன்றாம் நிலை வெற்றியாளர்: ரிம1,000 ரொக்கப் பரிசு.
    • நான்காம் நிலை வெற்றியாளர்: ரிம1,000 ரொக்கப் பரிசு.

ஜிவிதாசெல்வி த/பெ என் மதி யழகன், விசாகன் த/பெ திவேந்தரன், தர்ஷன் ராம் த/பெ யோகேஸ்வரன், காவியாஸ்ரீ த/பெ முருகன், நிமல ரூபன் த/பெ ராஜமாணிக்கம், கபீஷா த/பெ நாகராஜன், தமயந்தி த/பெ கணபதி, புகலினி த/பெ தேவன், துர்காஷினி த/பெ ராஜமோகன், லாவண்யா த/பெ பூபாலன், பவிஷ்னா த/பெ கணேசன், ஜெகதீஸ்வரி த/பெ ஜெகதீஸ், தசரத்புத்ரன் த/பெ ஜாரெட் ஜான், குருமிதன் த/பெ கதி கேசன், சூரியழகன் த/பெ என் மதி யழகன், சௌமியாக் த/பெ சிவசங்கர், தனீஷா த/பெ புருஷோத்தமன், கவினாஸ்ரீ த/பெ செரிதரன், திருவாணன் த/பெ பட்மநாதன் மற்றும் விஷால் த/பெ கணேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 20 போட்டியாளர்களாவர்.

மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.